குத்தாலம்: தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீசார் அணிவகுப்பு

குத்தாலம்: தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க  போலீசார் அணிவகுப்பு
X

குத்தாலத்தில் போலீசார் அணிவகுப்பு நடத்தினர்.

குத்தாலம் பேரூராட்சி தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீசார் அணிவகுப்பு பேரணி நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் நடைபெற உள்ள பேரூராட்சி தேர்தலில் வாக்காளர்களின் தேர்தல் பதற்றத்தை தணிக்கும் வகையிலும், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் தேர்தல் அமைதியான முறையில் நடைபெறும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பாக விழிப்புணர்வு அணிவகுப்பு பேரணி இன்று குத்தாலத்தில் நடைபெற்றது.

இந்தப் பேரணியில் காவல் ஆய்வாளர்கள் செல்வம், வள்ளி, சிவதாஸ், செல்வி, சங்கீதா, ஆகிய 6 காவல் ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டு குத்தாலம் கடைவீதியில் இருந்து பேரணியாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக அரசு மேல்நிலைப்பள்ளி, மேலசெட்டி தெரு, கும்பகோணம் மெயின் சாலை வழியாக காவல் நிலையத்தை அடைந்தனர்.

இந்த பேரணியில் 100 க்கும் மேற்பட்டகாவல்துறையினர் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!