சாராயம் விற்க சொல்லும் போலீசார்: மயிலாடுதுறை போலீஸ் எஸ்.பி.யிடம் புகார்
போலீசார் மீது புகார் அளிப்பதற்காக மகன்களுடன் வந்த சுரேஷ்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கிளியனூர் மேலத்தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் தன் மகன்களுடன் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து பெரம்பூர் போலீசார் மீது புகார் தெரிவித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
குடிப்பழக்கத்திற்கு அடிமையான நான் காரைக்கால் பகுதிக்கு சென்று மதுஅருந்துவிட்டு விலைகுறைவு என்பதால் மதுபாட்டில்கள் வாங்கிவருவேன் அதனை தெரிந்தவர்கள் கேட்டால் கொடுத்துவிட்டு பணம் வாங்கிகொள்வேன். அப்படி இருந்த போது மது கடத்தியதாக பெரம்பூர் போலீசார் என்னை கைது செய்தனர். தொடர்ந்து சாராயம் விற்பனை செய் என்று போலீசார் கூறினர். அதனால் சாராய விற்பனை செய்து வாரந்தோறும் போலீசாருக்கு ரூ.7 ஆயிரம் மாமுல் கொடுத்து வந்தேன். எனது மனைவி இறந்த நிலையில் மகன்களுக்கு திருமணமாகி மருமகள்கள் வந்துவிட்டதால் சாராய விற்பனையை நிறுத்திவிட்டேன். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இனி சாராய விற்பனைசெய்யமாட்டேன் திருந்தி வாழவிரும்புவதாக எழுதிகொடுத்து சென்றேன்.
ஆனால் பெரம்பூர் போலீசார் சாராயம் விற்பனை செய்யவில்லை என்றாலும் எங்களுக்கு மாமூல்கொடுக்க வேண்டுமென்று கூறி மிரட்டி என்மீதும், எனது பிள்ளைகள் மீது பொய்வழக்கு போட்டு மிரட்டுகின்றனர். சென்னையில் வேலைபார்த்து வந்த எனது மகன் தீனாஅரசன் ஊருக்குவந்தபோது அவர் மீது சாராயம் விற்றதாக பொய்வழக்கு போட்டு என்னிடம் பணம்கேட்டு மிரட்டுகின்றனர். எங்கிருந்தோ சாராயபாக்கெட்டுக்களை கொண்டுவந்த என்வீட்டு முன்பு போட்டு உடைத்து போலீசார் வீடியோ எடுத்து செல்கின்றனர். இது குறித்து உரிய விசாரணை செய்து திருந்திவாழ நினைக்கும் என்னையும், எனது குடும்பத்தாரையும் நிம்மதியாக வாழ்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu