சீர்காழி அருகே காரில் கடத்தி வரப்பட்ட பாக்கெட் சாராயம் பறிமுதல்

சீர்காழி அருகே காரில் கடத்தி வரப்பட்ட பாக்கெட் சாராயம் பறிமுதல்
X

காருடன் பறிமுதல் செய்யப்பட்ட சாராயம் மற்றும் எரிசாராயம்.

சீர்காழி அருகேபாண்டிச்சேரியில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட பாக்கெட் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூந்தாழை கிராமத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் கவிதா தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்றை நிறுத்தி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து சீர்காழி நோக்கி சென்ற சொகுசு காரில் 250 லிட்டர் பாண்டி சாராயம், மற்றும் 110 லிட்டர் எரி சாராயம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சொகுசு கார் மற்றும் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் காரை ஓட்டி வந்த காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரியை சேர்ந்த கிளைமண்ட் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்