மக்களோடு மக்களாக இருந்து சேவை செய்வேன்: மயிலாடுதுறை பாமக வேட்பாளர் உறுதி

மக்களோடு மக்களாக இருந்து சேவை செய்வேன்: மயிலாடுதுறை பாமக வேட்பாளர் உறுதி
X
மக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்பேன் மக்களோடு மக்களாக இருந்து சேவை செய்வேன் என மயிலாடுதுறை பாமக வேட்பாளர் உறுதி

மயிலாடுதுறை சட்டமன்றதொகுதி அதிமுக கூட்டணி கட்சியின் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சித்தமல்லி பழனிச்சாமி தொகுதிக்குட்பட்ட கேசிங்கன் ஆத்துக்குடி, ராதாநல்லூர், மணல்மேடு பேரூராட்சி பகுதி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு பொதுமக்கள் மாலை மற்றும் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்

மணல்மேடு கடைவீதியில் பாமக வேட்பாளர் பழனிச்சாமி பிரச்சாரம் செய்து பேசுகையில் விவசாயி என்பதால் அனைவரின் கஷ்ட நஷ்டங்களை முழுமையாக அறிந்தவன் என்றும் நாகை மாவட்டம் உதயமானதிலிருந்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். தன்னால்தான் மயிலாடுதுறை மாவட்டம் அறிவிக்கப்பட்டது என்று யாரும் உரிமைகோர முடியாது என்றார். மயிலாடுதுறை மாவட்டம் உருவாக வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு மயிலாடுதுறையில் தடையை மீறி போராட்டம் நடத்தி முதலமைச்சரிடம் அழுத்தம் கொடுத்து மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்க செய்த பெருமையை பாமக நிறுவனர் ராமதாஸ் ஒருவர் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியும் என்றார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக முழுமையாக அனைத்து பகுதிகளிலும் போராட்டம் நடத்தியவர் அன்புமணி ராமதாஸ் தான். மக்களோடு மக்களாக இருந்து சேவை செய்ய வேண்டும் என்பதற்காக மயிலாடுதுறை தொகுதி வேட்பாளராக தன்னை பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்ந்தெடுத்துள்ளதாவும், விவசாயி என்பதால் தினந்தோறும் பல்வேறு கிராமங்களை கடந்து மயிலாடுதுறைக்கு சென்று வருவதால் மக்களை சந்தித்து மக்களின் கோரிக்கைகளையும், குறைகளையும் தன்னால் தீர்த்து வைக்க முடியும் என்றும், தன்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தால், மறுநாளே மயிலாடுதுறை பாதாளசாக்கடை பிரச்சனைகளை சரிசெய்து தருவேன். என்வீட்டு சாக்கடையில் ஏற்படும் அடைப்பை எப்படி உடனடியாக சரிசெய்வேனோ அதே போன்று பாதாளசாக்கடையில் ஒரு சொட்டு சாக்கடை நீர் வெளியேறாமல் சரிசெய்து தருவேன் மக்களோடு மக்களாக இருக்க எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!