மயிலாடுதுறையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

மயிலாடுதுறையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
X

மயிலாடுதுறையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

மயிலாடுதுறையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகமும், தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பபள்ளியும் இணைந்து தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மயிலாடுதுறையில் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். பள்ளியில் தொடங்கிய பேரணியை நகராட்சி ஆணையர் பாலு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த பேரணியில் பள்ளி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, நகரின் முக்கிய வீதிகளின் வழியே விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியவாறு சென்று மீண்டும் பள்ளியை அடைந்தனர்.

தொடர்ந்து, பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில், நகராட்சி நகர்நல அலுவலர் மருத்துவர் மலர்மன்னன், பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai powered agriculture