குத்தாலம் காவல் ஆய்வாளர் பொய் வழக்குப் போடுவதாக எஸ்பியிடம் புகார்
ஆய்வாளர் வள்ளி மீது நடவடிக்கை எடுக்ககோரி மனு அளித்த கார்த்திகேயன்
மயிலாடுதுறை மாவட்டம் தேரழந்தூரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் மீது கோயில் விழா தொடர்பாக குத்தாலம் காவல் ஆய்வாளர் வள்ளி என்பவர் பொய் வழக்குப் பதிந்ததாக கூறப்படுகிறது.
ஆய்வாளர் வள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறை இயக்குநருக்கு காரத்திகேயன் கோரிக்கை அளித்து இருந்தார். ஆனால் காவல்துறை இயக்குநர் நடவடிக்கை எடுக்காததால் அவரை பிரதிவாதியாக இணைத்து, அவர் நடவடிக்கை எடுக்க கட்டளையிடும்படி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இருதரப்பினரின் வாதங்களை கேட்ட நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா மனுதாரருக்கு காவல் கண்காணிப்பாளருக்கு புதிய கோரிக்கை மனு அளிக்குமாறு அறிவுறுத்தி, மனு அளித்த இரண்டு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டு மனு விசாரணையை முடித்து வைத்தார்.
இந்நிலையில், இன்று மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்த கார்த்திகேயன் எஸ்பி நிஷாவிடம் புகார் மனு அளித்தார். அந்த மனுவில், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக தன்மீது குத்தாலம் காவல் ஆய்வாளர் அடுத்தடுத்து பல பொய் வழக்குகளை பதிந்து, குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யும் அளவிற்கான சட்டவிரோதமாக பொய்வழக்குகளை போட்டுள்ளதாகவும், பொய்வழக்குகள் பதிவிடும் குத்தாலம் காவல் ஆய்வாளர் வள்ளி மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu