கோவில் விழாக்களில் பங்கேற்க நடவடிக்கை எடுக்க மயிலாடுதுறை ஆட்சியரிடம் மனு
கலெக்டரிடம் மனு அளிக்க வந்திருந்த மீனவ குடும்பத்தினர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கீழமூவர்கரை மீனவ சமூதாயத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது சகோதரர்கள் கர்ணன், நிலவன், ராஜா, முரளி, மாதவன் ஆகியோர் கடந்த 3வருடங்களுக்கு முன்பு கோவில் நிலைப்படிக்கு வெண்கலத்தினால் ஆன தகடு செய்து உபயம் செய்துள்ளனர். இதில் இவர்கள் பெயர்களை பொறித்திருந்தனர்.
தற்போது மீனவ பஞ்சாயத்தால் அந்த பெயர்களை அகற்ற வேண்டுமென்று கூறியது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் பஞ்சாயத்தால் ஜெயக்குமார் குடும்பத்தினர் மற்றும் அவருக்கு ஆதரவாக பேசிய 2 பேர் என்று மொத்தம் 8 மீனவ குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். ஊர்கட்டுப்பாட்டை மீறி அவர்களுடன் பேசினால் 50 ஆயிரம் அபராதம் விதிப்பதோடு பேசுவர்களையும் ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளனர்.
இது குறித்து ஜெயக்குமார் குடும்பத்தினர் கடந்த 25ம் தேதி சீர்காழி தாலுகா அலுவலகத்தில் புகார் அளித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் பாதிக்கப்பட்ட 8 மீனவ குடும்பத்தினர் மயிலாடுதுறை ஆட்சியர் லலிதாவிடம் புகார் மனு அளித்தனர்.
அதில், ஊர்கட்டுப்பாட்டை விதித்து எங்களை தொழிலுக்குசெல்ல விடாமல் தடுத்து தொடர்ந்து பிரச்னை செய்து வருவதோடு கோயில் விழாக்களுக்கு பிள்ளைகள் கூடவரக்கூடாது என்று மைக் மூலம் அறிவிப்பு வெளியிட்டதால் எங்கள் குழந்தைகள் மனவேதனை அடைந்து தற்கொலை செய்துகொள்வோம் என்று கூறும் நிலைக்கு எங்கள் குடும்பங்கள் தள்ளப்பட்டுள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கு எங்கள் சமுதாய ஊர்கட்டுப்பர்ட்டை நீக்கி கோயில் விழாக்களில் பங்கேற்பதற்கும், நாங்கள் கிராமத்தில் பாதுகாப்பாக வாழ்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் நாங்கள் குடும்பதடன் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu