பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு அனுமதி: முதல்வருக்கு தருமபுரம் ஆதீனம் ஆசி
தருமபுரம் ஆதீனம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
தருமபுரம் ஆதீன திருமடத்தில் ஆதீன குரு முதல்வர் குரு பூஜையையொட்டி வருகின்ற 22-ஆம் தேதி நடைபெற உள்ள பட்டணப் பிரவேச நிகழ்வில் ஆஜேகனகர்த்தரை பல்லக்கில் அமர்த்தி மனிதர்கள் சுமந்து செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி கடந்த மாதம் 27ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான உக்தவேதீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிய பரமாச்சாரிய சுவாமிகள், செங்கோல் ஆதீனம், தொண்டைமண்டல ஆதீனம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்
அப்போது தருமபுரம் ஆதீனகர்த்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு சாதனையோடு மீண்டும் இந்த பட்டணப் பிரவேச விழாவை நடத்தலாம் என்று தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார். அவர்களுக்கு நமது நல்லாசிகள். இந்த விழாவை தொடர்ந்து நடத்தப்படும் என்ற நிலையில் அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் முயற்சித்திருக்கிறார்.அவர்களுக்கும், அறநிலைத்துறை ஆணையர், செயலர் அனைவருக்கும் எல்லா நலன்களும் வளங்களும் வாழ்த்துகின்றோம். மரபுவழிபட்ட இதுபோன்ற சம்பிரதாயங்களில் அரசு தன்னுடைய நிலைப்பாட்டை அவர்கள் என்றைக்குமே மாறுபாடில்லாத வகையில் இருந்தது என்பதே இதன் மூலமாக நிருபித்து காட்டியிருக்கிறார்கள். தமிழ் வழியிலேயே இருந்து அவர்களுடைய முன்னோர்கள் எந்த அளவிற்கு ஆட்சி பீடத்தை நடத்தி கொண்டு அதே வகையிலேயே தமிழக முதல்வர் அவர்கள் இதை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
மனிதாபிமான அடிப்படையில் தோளில் சுமப்பது விமர்சிக்கப்படுகிறது இருந்தபோதிலும் அவரவர் சொந்த விருப்பத்தின் பேரிலேயே சுமக்கின்றனர், பட்டணப் பிரவேசம் நிகழ்வு முந்தைய ஆதீனங்கள் நிறுத்தாமல் செய்ததை தாங்கள் தொன்றுதொட்டு தற்போதும் செய்து வருகிறோம் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu