மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் நிரந்தர புகைப்பட கண்காட்சி: ஆட்சியர் தொடக்கம்

மயிலாடுதுறை  ஆட்சியர் அலுவலகத்தில் நிரந்தர புகைப்பட கண்காட்சி: ஆட்சியர் தொடக்கம்
X

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிரந்தர புகைப்பட கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் லலிதா தொடங்கி வைத்தார்

சுதந்திர போராட்ட வீரர்கள், மொழிகாவலர்கள், தமிழ் அறிவியல் அறிஞர்களின் நிரந்தர புகைப்பட கண்காட்சி அரங்கம் திறக்கப்பட்டது

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மயிலாடுதுறையில் வாழ்ந்து மறைந்த சரித்திரத்தில் இடம்பெற்ற சுதந்திர போராட்ட வீரர்கள், மொழிகாவலர்கள், தமிழ் அறிவியல் அறிஞர்களின் நிரந்தர புகைப்பட கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் லலிதா தொடங்கி வைத்தார்:-

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் வாழ்ந்து மறைந்த பிரபல சுதந்திர போராட்ட வீரர்கள், மொழிகாவலர்கள், தமிழ் அறிவியல் அறிஞர்களின் நிரந்தர புகைப்படக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் லலிதா திறந்து வைத்தார். இதில் மயிலாடுதுறையை சேர்ந்த தமிழக சூப்பர் ஸ்டார் எம்.கே. தியாகராஜபாகவதர்.

தமிழில் முதல் புதினத்தை இயற்றிய கவிஞர் வேதநாயகம் பிள்ளை, கம்ப ராமாயணத்தை இயற்றிய கவிப்பேரரசு கம்பர், சுதந்திர போராட்ட தியாகி தில்லையாடி வள்ளியம்மை, இலக்கியவாதி, சமயம், எழுத்தாளர் குன்றக்குடி அடிகளார், மொழிப்போர் தியாகி சாரங்கபாணி, சமூக சீர்திருத்தவாதி எழுத்தாளர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், தமிழிசை மூவர் கவிராயர் மாரிமுத்தா பிள்ளை, அருணாச்சலக் கவிராயர், முத்துத் தாண்டவர் உள்ளிட்ட சரித்திரத்தில் இடம்பெற்ற 18 நபர்களின் திருவுருவ படங்கள் இடம் பெற்றிருந்தன. இதனை பார்வையிட்ட ஆட்சியர் லலிதா கூறுகையில் கவிஞர் வேதநாயகம் பிள்ளைக்கு மணிமண்டபம் அமைக்கப்பட உள்ளதாகவும், இதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் புகழ்வாய்ந்த சரித்திரத்தில் இடம்பெற்ற பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்று குறிப்புகள் வைக்கப்பட உள்ளதாக அப்போது அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்