மயிலாடுதுறையில் ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
X

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன் ஓய்வூதியர் சங்கங்களின் 
கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன் ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஓய்வூதியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளான ஜனவரி 2020 முதல் இன்று வரை வழங்கவேண்டிய 11 சதவீத அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஓய்வூதியர்களுக்கு மருத்துவ செலவினங்களை மாவட்ட அளவிலான கமிட்டி வழங்கிட உத்தரவிட்டும் வழங்க மறுக்கும் காப்பீட்டு நிறுவனங்களின் போக்கினை கண்டித்தும், ஓய்வூதியர்களின் நலன் சார்ந்த பிற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளான ஓய்வூதியர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Tags

Next Story
ai in future agriculture