மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோயில் துலா உற்சவ தேரோட்டம்

மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோயில்  துலா உற்சவ தேரோட்டம்
X

மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோயில் தேரோட்டம் நடந்தது.

காவிரி துலா உற்சவத்தையொட்டி மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமள ரெங்கநாயகி சமேத பரிமள ரெங்கநாதர் ஆலயத்தில் காவிரி துலா உற்சவத்தை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் 22வது தலமும், பஞ்ச அரங்கங்களில 5வது அரங்கமுமான இந்த கோயிலில் ஐப்பசி மாத காவிரி துலா உற்சவம் கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. உற்சவத்தின் 10ம் நாளான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது.

இதனை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் பரிமளரெங்கநாதர் தேரில் எழுந்தருளசெய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. ஏராளமான பக்தர்கள் கோவிந்தா, பரிமள ரெங்கநாதா, நாராயணா என கோஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Tags

Next Story
ai marketing future