மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழா

மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழா
X

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார் பெருமாள்.

மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது.

மயிலாடுதுறை திருஇந்தளூரில் புகழ்பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களில் 22-வது ஆலயமும், பஞ்சரங்க ஆலயங்களில் ஐந்தாவது ஆலயமுமான ஸ்ரீபரிமள ரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழா இன்று அதிகாலைா நடைபெற்றது. இதனை முன்னிட்டு பகல்பத்து உற்சவத்தின் 10-ஆம் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி, பெருமாள் மோகினி அலங்காரத்தில் பதக்கம் தாங்கி உள் பிரகார வீதி உலா எழுந்தருளினார்.

தொடர்ந்து திருவந்திக்காப்பு மண்டபத்திற்கு எழுந்தருளிய பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து, படியேற்ற சேவை நடைபெற்றது. இதில், திருமங்கையாழ்வார் பாடிய 10 பாசுரங்களும் பாடப்பட்டது. ஒவ்வொரு படியாக பெருமாளை பல்லக்கில் தாலாட்டுவது போல் ஐந்து படிகளைக் கடந்து கோயில் கர்ப்பகிரகத்திற்கு எழுந்தருளினார்.

Tags

Next Story
the future of ai in healthcare