திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் ஆலய பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றம்

திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் பங்குனி உத்திரவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மயிலாடுதுறை திருஇந்தளூரில், 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் 108 வைணவ திவ்ய தேசங்களில் இருபத்தி இரண்டாவது ஆலயமுமான பரிமள ரங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. காவிரிக்கரையில் பெருமாள் பள்ளி கொண்ட நிலையில் அமைந்துள்ள பஞ்ச அரங்க ஆலயங்கள் எனப்படும், ஸ்ரீரங்கப்பட்டினம் ஸ்ரீரங்கம், சாரங்கம், அப்பாதுரங்கம் என்ற வரிசையில் ஐந்தாவது பஞ்ச ரங்க ஷேத்திரமாக பரிமள ரங்கநாதர் ஆலயம் அழைக்கப்படுகிறது.
புகழ் பெற்ற இந்த ஆலயத்தில் ஆண்டு பங்குனி உத்திர பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு பெருமாள் தங்க ரத்தின அங்கியில், திருவந்திக்காப்பு மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு தீப தூப ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 16-ஆம் தேதி பெருமாள் திருக்கல்யாண உற்சவம், 18ஆம் தேதி திருத்தேர் மற்றும் தீர்த்தவாரி நிகழ்ச்சிகள், 29ம் தேதி சந்திர புஷ்கரணியில் தெப்போற்சவம் நடைபெறுகின்றன. கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu