சீர்காழியில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பாண்டி சாராயம் மற்றும் கார் பறிமுதல்

சீர்காழியில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பாண்டி சாராயம் மற்றும் கார் பறிமுதல்
X

சாராயம் கடத்தியதாக கைது செய்யப்பட்டவர்களுடன் போலீசார் உள்ளனர்.

சீர்காழியில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பாண்டி சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதியில் வாகன சோதனையின்போது காரைக்காலில் இருந்து சீர்காழி நோக்கி வந்த காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தபோது 40 மூட்டைகளில் 2,000 பாட்டில் சாராயம் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கார் ஓட்டுநர் மயிலாடுதுறையை சேர்ந்த செந்தில் குமாரை கைது செய்து சீர்காழி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாண்டி சாராயம் மற்றும் காரின் மதிப்பு சுமார் இரண்டு லட்சம் இருக்கும்.

இதேபோன்று சீர்காழியை அடுத்த தில்லைவிடங்கன் கிராமத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த முருகன் என்பவர் கைது செய்து அவரிடமிருந்து ரூபாய் 2,000 மதிப்புள்ள 240 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்து கடை உரிமையாளர் முருகன் என்பவரை கைது செய்து சீர்காழி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்