மயிலாடுதுறையில் டிஎன்சிஎஸ்சி வொர்க்கர்ஸ் வாய்ஸ் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்
டிஎன்சிஎஸ்சி நிர்வாகத்தைக் கண்டித்து மயிலாடுதுறையில் டிஎன்சிஎஸ்சி வொர்க்கர்ஸ் வாய்ஸ் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் நெல்லினை உடனடியாக இயக்கம் செய்யாமல், மழையால் நனையும் நெல் மூட்டைகளுக்கு ஊழியர்களிடம் பணம் பிடித்து செய்து, ஊழலுக்கு வழிவகுக்கும் டிஎன்சிஎஸ்சி நிர்வாகத்தைக் கண்டித்து மயிலாடுதுறையில் டிஎன்சிஎஸ்சி வொர்க்கர்ஸ் வாய்ஸ் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இடதுசாரி தொழிற்சங்கமான டிஎன்சிஎஸ்சி வொர்க்கர்ஸ் வாய்ஸ் சார்பில் மண்டல செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் போதுமான அடிக்கட்டை, தார்ப்பாய் உள்ளிட்ட உரிய பாதுகாப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் நெல் மூட்டைகள் மழையில் நனைத்து சேதமடைந்தால், அதற்கு கொள்முதல் நிலைய ஊழியர்களிடம் பணம் பிடித்தம் செய்யப்படுகிறது.
தங்களுக்கு மாத ஊதியம் ரூ.9000 வழங்கப்படும் நிலையில் ரெகவரி என்ற பெயரில் லட்சக்கணக்கில் பணம் கட்டச் சொல்லி நிர்வாகம் வற்புறுத்துவதன் காரணமாகவும், அதிகாரிகளுக்கும், லாரி ஓட்டுநர்களுக்கும் கொடுப்பதற்காகவும் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதலுக்கு மூட்டைக்கு ரூ.40 வசூலிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாகவும், எனவே, விவசாயிகளிடம் இருந்து பணம் வசூலிக்க நெருக்கடி ஏற்படுத்தும் டிஎன்சிஎஸ்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இவ்வாறு மழையில் நனைந்த நெல்லினை அரைக்கும்போது மங்கிய நிறத்தில் வரும் அரிசியை ஊரகப் பகுதிகளுக்கும், மலைவாழ் மக்களுக்கும் அனுப்புவதைக் கண்டித்தும் முழக்கங்கங்கள் எழுப்பப்பட்டன. எனவே, ஊழியர்களை ஊழலுக்குத் தூண்டாமல், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லினை உடனடியாக இயக்கம் செய்ய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu