/* */

ஆக்சின் தயாரிப்பு மையம் 10 நாட்களில் அமைக்கப்படும்

மயிலாடுதுறை, சீர்காழி அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தயாரிப்பு மையம் 10 நாட்களில் அமைக்கப்படும்: மாவட்ட ஆட்சியர்

HIGHLIGHTS

ஆக்சின் தயாரிப்பு மையம் 10 நாட்களில் அமைக்கப்படும்
X

மயிலாடுதுறை, சீர்காழி அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தயாரிப்பு மையம் 10 நாட்களில் அமைக்கப்படும் அதன்பிறகு ஆக்சிஜன் தட்டுப்பாடு நமது மாவட்டத்தில் இருக்காது என்று மாவட்ட ஆட்சியர் லலிதா கூறியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறையில் முதல்முறையாக தனியார் மருத்துவமனை (அருண்பிரியா மருத்துவமனை) சார்பில் கொரோனா கிசிக்சை மையம் அமைக்கப்பட்டு தொடங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் லலிதா தொடங்கி வைத்தார். ஊழியர்களிடம் பாதுகாப்புடன் பணிசெய்ய அறிவுறுத்திய மாவட்;ட ஆட்சியர் லலிதா செய்தியாளர்களிடம் கூறுகையில்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்றால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை, சீர்காழி அரசு மருத்துவமனையில் 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மயிலாடுதுறை மயூராஹால் புத்தூர் கலைக்கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. பலர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். மயிலாடுதுறையில் தருமபுரம்ஆதீனம் கல்லூரி, ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் கரோனா சிகிச்சை மையம் தொடங்க உள்ளோம்.

மயிலாடுதுறை, சீர்காழி அரசு மருத்துவமனைகளில் மொத்தம் 200 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் உள்ளது. மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில்; 20பேர் தீவிரி சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நமது மாவட்டத்தில் 2, 3 நாட்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் பிரச்னை இல்லை. மயிலாடுதுறை, சீர்காழி அரசு மருத்துவமனையில் 10 நாட்களுக்குள்ளாக ஆக்சிஜன் தயாரிக்கும் பிளாண்ட் அமைக்கப்பட உள்ளது. அதனை அமைத்து ஆக்சிஜன்; தயாரிப்பு பணிகள் தொடங்கினால் ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்னை மயிலாடுதுறை மாவட்டத்தில் இருக்காது.

முழு அடைப்பால் கடந்த சில நாட்களில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக 7 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதிப்பதை மக்கள் தவறாக எடுத்துகொள்ள வேண்டாம். 15 நாட்கள் வீட்டில் இருந்தால் தொற்று குறையும் என்று எதிர்பார்க்கிறோம். அதற்கான முயற்சிதான் இது. மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தால்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை மையம் இல்லாமல் இருந்தது. தற்போது முதல்முயற்சியாக மயிலாடுதுறை அருண்பிரியா ஆஸ்பத்திரி 50 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையத்தை தொடங்கியுள்ளனர். 20 படுக்கைகள் தீவிர சிகிச்சை அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

Updated On: 7 May 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...