சீர்காழி அரசு மருத்துவமனைக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி வழங்கல்..!

சீர்காழி அரசு மருத்துவமனைக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி வழங்கல்..!
X
சீர்காழி முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து அரசு மருத்துவமனைக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வழங்கல்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1996ம் ஆண்டு பயின்ற மாணவர்கள் ஒன்றிணைந்து சீர்காழி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி உள்ளிட்ட ரூபாய் இரண்டு லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கினர்.

சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி 1996 ம் ஆண்டு பத்தாம் வகுப்பு மாணவர்கள் சார்பாக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு10 லிட்டர் ஆக்சிஜன் கன்ஸ்ன்டிரேட்டர், ஆக்ஸிபுலோ மீட்டர், ஐஆர் தெர்மாமீட்டர், பல்ஸ் ஆக்சிமீட்டர், மாஸ்க்-2000, பேட்டரி100 ஆகியவை சீர்காழி அரசு தலைமை மருத்துவர் பானுமதி அவர்களிடம் வழங்கப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியர்கள், மருத்துவர்கள், முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story