செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரண கூட்டம்

செம்பனார்கோவில்  ஊராட்சி ஒன்றியக் குழு  சாதாரண கூட்டம்
X

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியக்குழுக்கூட்டம் தலைவர் தலைமையில் நடைபெற்றது

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியக்குழுக்கூட்டம் தலைவர் தலைமையில் நடைபெற்றது

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கான சாதாரண கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.

ஒன்றியக்குழு துணை தலைவர் பாஸ்கரன், ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலையில் சிறப்பு விருந்தினராக பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு ஒன்றியக்குழு உறுப்பினர்களின் பல்வேறு கோரிக்கையால் சரி செய்யப்படும் என்று கூறினார். இதில், நல்லாடை ஊராட்சி மன்றம் ஊராட்சி செயலாளர் செல்வகுமார் கடந்த ஆண்டு கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க ரூ. 25 லட்சம் காசோலையை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன் வழங்கினார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!