பள்ளிகள் திறப்பை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் வாகனங்கள் ஆய்வு
மயிலாடு துறை மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பை முன்னிட்டு தீ தடுப்பு ஒத்திகை நடந்தது.
தமிழகத்தில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் செயல்படத் தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் இயங்கும் பள்ளிகளில் உள்ள பேருந்துகளை ஆய்வு செய்யும் பணி தொடங்கியது. அவ்வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 73 பள்ளிகளை சேர்ந்த 460 பள்ளிப் பேருந்துகள் மன்னம்பந்தலில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் நிறுத்தப்பட்டு சோதனை நடைபெற்றது.
வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நாகராஜன் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆய்வில், மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா பங்கேற்று பேருந்துகளை பார்வையிட்டு. வாகன டயர்கள், அவசரகால கதவு, ஜன்னல், படிகள், தீயணைப்புகருவிகள், முதலுதவி பெட்டி, ஹேண்ட் பிரேக், வேக கட்டுப்பாட்டு கருவி, ஓட்டுநரின் பார்வைத் திறன் உள்ளிட்ட 16 அம்சங்களை உறுதிப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தினார்.
முன்னதாக தீயணைப்பு துறை சார்பில் வாகன விபத்து நேரிட்டால் செய்யப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், கோட்டாட்சியர் பாலாஜி, டி.எஸ்.பி. வசந்தராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராம்குமார் விசுவநாதன், வாகன ஓட்டுனர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu