ரூ.85 லட்சத்தில் கட்டப்பட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை திறப்பு

ரூ.85 லட்சத்தில் கட்டப்பட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை திறப்பு
X

மயிலாடுதுறையில்  கூட்டுறவு பண்டக சாலையை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறையில் ரூ.85 லட்சத்தில் கட்டப்பட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலையை அமைச்சர் நேரு திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை நாராயண பிள்ளை தெருவில் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைக்கு சொந்தமான இடத்தில் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் பொதுப்பணித் துறையால் புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இதன்மூலம் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி மற்றும் சீர்காழி தாலுகாக்களை எல்லையாகக் கொண்ட 424 அங்காடிகள் மூலம் 2.80 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோக திட்ட பொருட்களை வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கட்டிமுடிக்கப்பட்ட பண்டகசாலை கட்டிடத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் இன்று நடைபெற்றது. இதில்,

சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் இதனை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் நிவேதாமுருகன், ராஜகுமார், மண்டல இணைப்பதிவாளர் பெரியசாமி மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story