மாற்றுத்திறனாளிக்கு சில மணி நேரத்திலேயே குடும்ப அட்டை வழங்கிய அலுவலர்

மாற்றுத்திறனாளிக்கு சில மணி நேரத்திலேயே குடும்ப அட்டை வழங்கிய அலுவலர்
X

குடும்ப அட்டைக்கான ஆணையை வழங்கிய அதிகாரி.

தரங்கம்பாடியில் மாற்றுத்திறனாளிக்கு சில மணி நேரத்திலேயே குடும்ப அட்டை நகல் ஆணையை வழங்கிய வட்ட வழங்கல் அலுவலர்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா மாமாகுடி ஊராட்சியில் வசித்து வரும் மாற்றுத்திறனாளியான தனலட்சுமி சுரேஷ். இவர்களுக்கு ஆண் குழந்தை, பெண் குழந்தை என குடும்பத்தில் நான்கு நபர்கள் உள்ளனர். மாற்றுத்திறனாளியான இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளாக குடும்ப அட்டை இல்லாத நிலையில் தரங்கம்பாடி தாலுகாவில் குடும்ப அட்டை வேண்டி மனு தாக்கல் செய்ய நேற்று வட்ட வழங்க அலுவலர் பாபுவிடம் அணுகியபோது, அவர் சிறிது நேரம் தரைதளத்தில் இருங்கள் உங்களுக்கு ஏற்பாடு செய்துத் தருகிறேன் என்று கூறி மேலே சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து புதிய குடும்ப அடையாள அட்டைக்கான பதிவிறக்க நகல் ஆனையை வட்ட வழங்கல் அலுவலர் பாபு இரண்டாவது தளத்தில் இருந்து இறங்கி வந்து மாற்றுத்திறனாளி தனலட்சுமிக்கு வழங்கினார். உடன் அவரது குழந்தைகள் சுகந்தன், சுபஸ்ரீ உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!