கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X

மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர் சங்கத்தினர்

சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் தமிழக முதல்வருடன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கவிதா தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில், ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் ஓய்வு ஊதியம் ரூ.9,750 வழங்க வேண்டும், ஓய்வுபெறும் சத்துணவு அமைப்பாளர் சமையலர் உதவியாளர்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் ஒட்டு மொத்த தொகை வழங்க வேண்டும், ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 62 ஆக உயர்த்த வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Tags

Next Story
ai in future agriculture