/* */

சீர்காழி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

சீர்காழி அரசு மருத்துவமனையில் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

சீர்காழி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள்  உள்ளிருப்பு போராட்டம்
X

சீர்காழி அரசு மருத்துவமனை வளாகத்தில் செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் பணியாற்ற கடந்த 6 மாதங்களுக்கு முன் நியமிக்கப்பட்ட தற்காலிக மருத்துவர்கள், செவிலியர்கள்,ஆய்வக டெக்னீஷியன் உட்பட 28 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு கடந்த 6 மாதமாக ஊதியம் வழங்கபடவில்லை என கூறப்படுகிறது.இந்நிலையில் இன்று காலை முதல் இவர்கள் 28 பேரும் தங்களுக்கு ஊதியத்தை வழங்க கோரியும், தொடர்ந்து பணி வழங்க கோரியும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதே போல் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் சுகாதார பணியாளர்களை இன்று முதல் 12 மணி நேரம் வேலை செய்ய மருத்துவமனை நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.அதனை ஏற்க மறுத்து சுகாதார பணியாளர்கள் தங்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மிகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் தங்களை 12 மணி நேரம் பணியாற்ற வலியுறுத்துவதாகவும் இல்லாவிடில் வேலையை விட்டு போங்கள் என அலட்சியமாக பேசுவதாகவும் குற்றம்சாட்டிய பணியாளர்கள் வழக்கமான பணியை வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 18 Oct 2021 10:51 AM GMT

Related News