அணுக்கழிவு:மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அணுக்கழிவு:மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கூடங்குளம் அணுக்கழிவுகளை அதே வளாகத்தில் புதைக்கும் முடிவைக் கண்டித்து மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் தொகுதி தலைவர் தாழை வரதராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மணிசெந்தில், மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக், மாநில மகளிர் பாசறை பொறுப்பாளர் காளியம்மாள், மாநில சுற்றுச்சூழல் பாசறை துணைத் தலைவர் காசிராமன் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கூடங்குளம் அணுக் கழிவுகளை அதே வளாகத்தில் புதைக்கும் முடிவை கண்டித்தும், மத்திய மீன்வள மசோதாவை கண்டித்தும் கண்டன உரையாற்றி முழக்கங்களை எழுப்பினர்.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு