கார் இல்லை : பணம் இல்லை குதிரை வண்டியில் பிரசாரம்

கார் இல்லை : பணம் இல்லை    குதிரை வண்டியில் பிரசாரம்
X
மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர்கட்சி வேட்பாளர் குதிரை வண்டியில் பிரசாரம் செய்தார்.

மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காசிராமன் பழமையை நினைவுகூறும் வகையில் குதிரை வண்டியில் விவசாயி சின்னத்திற்கு வாக்கு கேட்டு பரப்புரை மேற்கொண்டார்.

மண்வளம் காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுமையான முறையில் பிரச்சாரம் மேற்கொண்டுவரும் வேட்பாளர் காசிராமன், தொகுதிக்குட்பட்ட சித்தர்காடு, மூவலூர், மல்லியம், ஆனைமேலகரம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் தொண்டர்கள் பைக்கில் பின்தொடர குதிரை வண்டியில் சென்று வாக்கு சேகரித்தது பொதுமக்களை கவர்ந்தது.

அக்கட்சியின் தொண்டர்கள் பேசும்போது, எங்களிடம் கார் இல்லை , பணம் இல்லை. இயற்கையை மதிக்கும் எங்களை வெற்றி பெறச் செய்யவேண்டும். நாங்கள்தான் மக்களுக்கு நல்லதை செய்வோம். சம்பாதிக்க நினைக்க மாட்டோம். என்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!