கொடநாடு கொலை வழக்கை விசாரிப்பதில் தவறில்லை: சரத்குமார் பேட்டி
மயிலாடுதுறை அருகே எலந்தங்குடியில் ஓட்டல் திறப்பு விழாவிற்கு வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்
கொடநாடு கொலை வழக்கை விசாரணை செய்வதில் தவறில்லை என்றார் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்.
மயிலாடுதுறை அருகே எலந்தங்குடியில் ஓட்டல் திறப்பு விழாவிற்கு வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் மேலும் கூறியதாவது:ந ல்லதை பாராட்டுவதும், தவறை சுட்டிகாட்டுவதுதான் அரசியல் நாகரிகம். முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் வேண்டாம் என்று கூறிவது வரவேற்கத்தக்கது. இது, பேரவையின் நேரத்தை சிறப்பாக பயன்படுத்துவதற்கு உதவும். கொடநாடு இறப்பு கொலையா?, தற்கொலையா? என விசாரண நடத்துவதில் தவறொன்றும் இல்லை. உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி குறித்து, செப்.1-ஆம் தேதி நடைபெற உள்ள மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை அரசியல் கட்சியை சார்ந்துதான் வெற்றி பெற முடியும் என்பது கிடையாது. போட்டியிடும் வேட்பாளர்களின் செயல்பாடுகள் தான் வெற்றியை தீர்மானிக்கிறது. வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதுகுறித்த, முழுவிவரங்கள் தெரியாததால், கருத்து கூற விரும்பவில்லை. கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பதாக செய்தி வருகிறது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த வேண்டும். பள்ளிகள் திறக்காததால் குழந்தைகளின் மன அழுத்தம் அதிகரித்துள்ளது. அதனை கருத்தில் கொண்டு குழந்தைகள், பாதுகாப்பாக பள்ளிக்கு செல்வதை உறுதி செய்யவேண்டும். அதிக பயன்பாடுகளைத் தரும் பனைமரத்தை பாதுகாக்க வேண்டும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu