/* */

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில்,திருவெண்காடு கோவில்கள் 'வெறிச்'

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில்,திருவெண்காடு கோவில்கள் வெறிச்
X

சீர்காழி அருகே நவகிரக ஸ்தலமான வைத்தீஸ்வரன்கோவில்,திருவெண்காடு கோவில்கள் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று கிழமைகளில் வழிபாட்டுத்தலங்களில் வழக்கமான ஆறு கால பூஜைகள் நடைபெறும். ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து இந்த உத்தரவு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. கோவில்களின் நவகிரக ஸ்தலங்கள் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் செவ்வாய் ஸ்தலம்,திருவெண்காடு புதன் கோவில்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை மார்கழி மாதம் என்பதால் அதிகாலையிலேயே காலை பூஜைகள் நடைபெற்று விட்டன.

வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று கிழமைகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பும் கோவில் வாசல் பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது மேலும் பக்தர்கள் யாரும் வராமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

Updated On: 7 Jan 2022 12:15 PM GMT

Related News