தரங்கம்பாடி பேரூராட்சியில் எம்.எல்.ஏ. நிவேதா முருகன் வாக்கு சேகரிப்பு

தரங்கம்பாடி பேரூராட்சியில்  எம்.எல்.ஏ. நிவேதா முருகன் வாக்கு சேகரிப்பு
X

தரங்கம்பாடியில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக நிவேதா முருகன் எம்.எல்.ஏ. பிரச்சாரம் செய்தார்.

தரங்கம்பாடி பேரூராட்சியில் எம்.எல்.ஏ. நிவேதா முருகன் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சியில் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் தரங்கம்பாடி பேரூராட்சி, எருக்கட்டாஞ்சேரி, வடக்கு மேட்டுத் தெரு 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் கழக வேட்பாளர் உமா -முருகனுக்கு உதயசூரியன் சின்னத்திற்கு நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் வாக்குகள் சேகரித்தார்.

அப்போது 1-வது வார்டைச் சார்ந்த 100-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.வில் இருந்து விலகி பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இதில் செம்பை ஒன்றிய செயலாளர்கள் எம். அப்துல் மாலிக், பி.எம்.அன்பழகன், நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் ஞானவேலன், செம்பை ஒன்றிய துணை பெருந்தலைவர் மைனர் பாஸ்கர், அ.தி.மு..க பிரமுகரும் தொழிலதிபருமான ஏ.கே.சந்துரு, முத்துராஜா, தகவல் தொழில்நுட்பப் பிரிவு அணி அமைப்பாளர் பி.எம்.ஸ்ரீதர் மற்றும் 1-வது வார்டு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியின் பொறுப்பாளர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!