மயிலாடுதுறை: சித்த மருத்துவ பெட்டகத்தை எம்.எல்.ஏ. நிவேதா முருகன் வழங்கினார்

மயிலாடுதுறை: சித்த மருத்துவ பெட்டகத்தை  எம்.எல்.ஏ. நிவேதா முருகன் வழங்கினார்
X

மாணவிகளுக்கு சித்த மருத்துவ பெட்டகங்களை நிவேதா முருகன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

மயிலாடுதுறையில் சித்த மருத்துவ பெட்டகத்தை எம்.எல்.ஏ. நிவேதா முருகன் வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த பொறையாரில் உள்ள ஞான இல்லத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் நலம் தரும் சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் கலந்துகொண்டு மாணவிகளுக்கு நலம்தரும் சித்த மருத்துவ பெட்டகத்தை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இதில் சித்த மருத்துவ தலைமை மருத்துவ அலுவலர் பத்மநாதன், பொறையாறு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அபிஷா சுல்தானா, பல் மருத்துவர் சங்கர், வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் கார்த்திக் சந்திரகுமார் ஆகியோர் சித்த மருத்துவத்தின் முக்கியத்துவத்தையும், பயன்படுத்துவதைப் பற்றியும் உரையாற்றினர்.

Tags

Next Story
ai powered agriculture