2 குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு நிவேதா முருகன் எம்.எல்.ஏ. நிவாரண உதவி
மயிலாடுதுறை அருகே இரண்டு குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு நிவேதா முருகன் எம்.எல்.ஏ. நிவாரண உதவி வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கந்தமங்கலம் பிள்ளையார்கோவில் தெரு பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம், மணிமேகலை குடும்பத்தினரின் சன்சிகா(9) சுஜி(8) என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். கடந்த 2012 ஆம் ஆண்டு நண்பர்களுடன் அருகே உள்ள ஆயிகுளத்தில் மீன்பிடிக்க சென்றனர். குளத்தில் குறைவாக தண்ணீர் இருந்ததாலும் சேறும் சகதியாகவும் இருந்ததால் சேற்றில் சிக்கி இரண்டு குழந்தைகளும் உயிரிழந்தனர்.
இந்நிலையில் இரண்டு குழந்தைகளையும் இழந்து வாடும் சண்முகசுந்தரம் குடும்பத்தினரை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் நேரில் சென்று ஆறுதல் கூறி ரூ.10ஆயிரம் நிவாரணம் வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு சார்பில் உதவி செய்ய ஏற்பாடு செய்து தரப்படும் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu