மயிலாடுதுறை அருகே ஆம்புலன்ஸ் ஓட்டினார் நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ

மயிலாடுதுறை அருகே  ஆம்புலன்ஸ் ஓட்டினார்  நிவேதா எம்.முருகன்  எம்.எல்.ஏ
X

நிவேதா முருகன் எம்.எல்.ஏ. ஆம்புலன்ஸ் ஓட்டினார்.

மயிலாடுதுறை அருகே ஆம்புலன்ஸ் ஓட்டி நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ. அதன் சேவையை தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் அரங்கக்குடி வடகரையில் அல் கரீம் அறக்கட்டளையின் சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் எஸ் .எம். சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது. இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் கலந்துகொண்டு அறக்கட்டளையின் வாகனத்தின் சாவியை வழங்கி சிறப்பித்தார்.

பின்னர் வாகனத்தை தானே இயக்கி வடகரையிலுள்ள அனைத்து தெருக்களிலும் ஓட்டி சென்று பரிசோதனை செய்தபின் மக்களின் பயன்பாட்டுக்கு வழங்கினார். இதில் ஒன்றிய செயலாளர் அன்பழகன், நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஞானவேலன், மாவட்ட பொருளாளர் ஜி.என்.ரவி, ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர் மற்றும் ஊர் ஜமாத்தார்கள் மற்றும் கிராம மக்கள் பலர் உடனிருந்தனர். முடிவில் அல் கரீம் அறக்கட்டளையின் நிர்வாக மேலாளரும் மாவட்ட சிறுபான்மை அணி துணை செயலாளருமான ஹேப்பி-அர்சத் நன்றி கூறினார்.

Tags

Next Story
ai in future agriculture