மயிலாடுதுறை அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம்..!
மயிலாடுதுறையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
மயிலாடுதுறை :
மயிலாடுதுறையில் அதிமுக பாராளுமன்ற வேட்பாளர் பாபுவை ஆதரித்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். அப்பபோது மண்வெட்டி பிடித்த விவசாயி, நான். விவசாயிகள் கஷ்டம் எனக்கு தெரியும், கூட்டணிக்காக பெங்களூர் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் விவசாயிகளுக்கு தண்ணீர் பெற்றுத் தராததால், மூன்று லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.
மயிலாடுதுறையில் அதிமுக சார்பில் அக் கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர் பாபுவை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். மேடைக்கு வந்த அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். கூட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் எஸ் பவுன்ராஜ், தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர் கே பாரதிமோகன், தேமுதிக மாவட்ட செயலாளர் ஜலபதி, கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி
கொரோனா பெருந்தொற்று காலத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ரூ.12,110 கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்தது அதிமுக அரசு. 50 ஆண்டுகால காவேரி பிரச்சனைக்கு நீதிமன்ற உத்தரவு மூலம் தீர்வு ஏற்படுத்தி தந்தது அதிமுக. அந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த தவறியது திமுக அரசு.
திமுக அழுத்தம் கொடுக்க தவறிய காரணத்தால் தமிழ்நாட்டுக்கு கர்நாடகா முறையாக தண்ணீர் வழங்கவில்லை. ஸ்டாலினுக்கு டெல்டா விவசாயிகளைப் பற்றியோ , தமிழக மக்களை பற்றியோ கவலையில்லை. அவருக்கு தேவை மத்தியில் ஆட்சி அதிகாரம் மட்டுமே. விவசாயிகளின் நலனை கருதி 22 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கி காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி முறைப்படுத்தும் குழு அமைக்க வழி வகுத்தது அதிமுக. டெல்டா மாவட்டங்களில் தனியார் தொழிற்சாலைகள் வராமல் தடுத்து பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது அதிமுக.
மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு கையெழுத்து இட்டது திமுக அரசு. அதனை தடுத்து நிறுத்தியது அதிமுக அரசு. என்று பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu