மயிலாடுதுறையில் புதிதாக மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் திறப்பு

மயிலாடுதுறையில் புதிதாக மாவட்ட வேலை வாய்ப்பு  அலுவலகம் திறப்பு
X

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய வேலைவாய்ப்பு அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

மயிலாடுதுறையில் புதிதாக மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் திறப்பு

நாகை மாவட்டத்தில் இருந்து 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் 2020ம் ஆண்டு பிரிக்கப்பட்டது. இதையடுத்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டு மயிலாடுதுறை மாவட்டம் செயல்பட்டு வந்தாலும் பல்வேறு துறைகள் பிரிக்கப்படாமல் ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மாவட்டத்தின் தலைமையில் இயங்கி வருகிறது. தற்போது ஒவ்வொரு துறையாக மயிலாடுதுறை மாவட்டத்தின் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கான மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மயிலாடுதுறை பாலாஜி நகர் 2வது தெருவில் இன்று துவங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் வாடகை கட்டிடத்தில் துவங்கப்பட்ட மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார், திருச்சி மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குநர் சந்திரன், நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பிரகாசம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலராக நியமிக்கப்பட்ட மா.பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறையில் வேலைவாய்ப்பு அலுவலகம் திறக்கப்பட்டதால் மாணவர்கள் நாகை மாவட்டத்திற்கு செல்லாமல் மயிலாடுதுறையிலேயே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பயன்பெற முடியும் என்பதால் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியடைந்தனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!