மயிலாடுதுறையில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா- கலெக்டர் பங்கேற்பு

மயிலாடுதுறையில் நடந்த தேசிய ஊட்டச்சத்து மாத விழாவில் கலெக்டர் பங்கேற்றார்.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் லலிதா பங்கேற்று, குத்துவிளக்கு ஏற்றிவைத்து, அங்கன்வாடி பணியாளர்கள் தயார் செய்து வைத்திருந்த பாரம்பரிய உணவுக் கண்காட்சியை பார்வையிட்டார். மாவட்ட ஆட்சியர் ஊட்டச்சத்து உறுதிமொழியை வாசிக்க, அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

தொடர்ந்து, ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணியை அவர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், கோட்டாட்சியர் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் 692 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் 5733 கர்ப்பணி பெண்களும், 3933 பாலூட்டும் தாய்மார்களும், 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 43295 பேரும் பயனடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!