சீர்காழி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

சீர்காழி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்  தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு
X

சீர்காழி பெஸ்ட் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது.

சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 29-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது.

நிலைப்புரு வாழ்க்கைக்கான அறிவியல் எனும் தலைப்பில் நடத்தப்பட்ட இந்த அறிவியல் மாநாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 46பள்ளிகளை சேர்ந்த மாணவ}மாணவியர் அவர்களுக்கான வழிகாட்டி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் பேராசிரியர் வீழிநாதன் தலைமை வித்தார்.செயலாளர் நந்த.இராஜேந்திரன்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ,ஷீபா,பள்ளி முதல்வர் ராமலிங்கம் முன்னிலை வகித்தனர்.

அறிவியல் இயக்க மாவட்ட பொருளாளர் தண்டாயுதபானி விளக்க உரையாற்றினார்.பள்ளி நிர்வாக அலுவலர் டாக்டர்.ஜி.பன்னீர்செல்வம் விளக்க உரையாற்றினார்.இதில் 46பள்ளி மாணவ மாணவியர் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்து விளக்கினர்.ஆய்வுகட்டுரை சமர்பித்த மாணவர்களுக்கு இளம்விஞ்ஞானி விருது வழங்கப்பட்டது.

இதில் பெஸ்ட் மெட்ரிக்பள்ளி,ச.மு.இ.மெட்ரிக்பள்ளி,செம்பனார்கோயில் அரசு பெண்கள் பள்ளி,தருமபுரம் குருஞானசம்பந்தர் பள்ளி,மயிலாடுதுறை செயின்ட் ஆன்டனி பள்ளி ஆகிய 5பள்ளிகளை சேர்ந்த குழுக்கள் மாநில போட்டிக்கு தேர்வாகினர்.

Tags

Next Story
பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறைவு..! விவசாயிகளின் கவலை அதிகரிப்பு..!