சீர்காழியில் தொழிலாளி மர்ம மரணம், கொலை வழக்கு பதிவு செய்ய கோரி உறவினர்கள் மறியல்

சீர்காழியில் தொழிலாளி மர்ம மரணம், கொலை வழக்கு பதிவு செய்ய கோரி உறவினர்கள் மறியல்
X
சீர்காழியில் தொழிலாளி மர்ம மரணம் அடைந்ததையொட்டி, கொலை வழக்கு பதிவு செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நெப்பத்தூரில் தனியார் செங்கல் சூளையில் கடந்த 17 ஆம் தேதி கூலி தொழிலாளி சீனிவாசன் மர்மமான முறையில் மரணமடைந்தார்.

அவரது உறவினர்கள் தங்கள் கோரிக்கை ஏற்கும் வரை அவரது உடற் கூறாய்வு செய்யக்கூடாது என கடந்த மூன்று நாட்களாகா காத்திருப்பு போராட்டம் நடத்திவந்தனர். இந்த நிலையில் நேற்று உடற்கூறாய்வு முடிந்தது. ஆனால் கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி உடலை வாங்க மறுத்து மருத்துவமனையில் இருந்து வெளியேறினர்.

தற்போது 5 வது நாளாக கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி சீனிவாசன் உடலை வாங்க மறுத்து சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே 300 க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர். கோட்டாட்சியர் நாராயணன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனால் சீர்காழியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!