மயிலாடுதுறையில் கொலை வழக்குகளை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற கோரி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் கொலை வழக்குகளை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற கோரி ஆர்ப்பாட்டம்
X

நிலுவையில் உள்ள கொலை வழக்குகளை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக்கோரி மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மயிலாடுதுறையில் கொலை வழக்குகளை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற கோரி நாம் மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காவல்நிலையங்களில் பல்வேறு கொலைகுற்றங்கள் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டும் பல ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வலியுறுத்தியும் ஆர்பாட்டம் செய்தனர்.

நாம் மக்கள் இயக்க தலைவர் வழக்கறிஞர் சங்கமித்ரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 2012ம் ஆண்டு நாம் மக்கள் இயக்க தலைவர் வழக்கறிஞர் சங்கமித்திரனை கூலிபடையைவைத்து கொலைசெய்ய முயன்ற அப்போதைய பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ் மற்றும் கூலிப்படையை கைது செய்ய வேண்டும், சீர்காழி மணல்பாபு கொலைவழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், பொறையார் கேசவன்பாளையம் கவியரசி கொலைவழக்கு, செறுகடம்பூர் இளம்பெண் கொலைவழக்கு, சாதிமறுப்பு திருமணம்செய்துகொண்ட ஓலக்குடி காதலர் இரட்டை கொலைவழக்குகளை சி.பி.சி.ஐ.டி.விசாரணைக்கு மாற்றகோரி கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்