மயிலாடுதுறை அருகே 500க்கும் மேற்பட்ட மாணவர்களின் சிலம்பாட்ட போட்டி

மயிலாடுதுறை அருகே 500க்கும் மேற்பட்ட மாணவர்களின் சிலம்பாட்ட போட்டி
X

மயிலாடுதுறை அருகே பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சிலம்பாட்ட போட்டி நடந்தது.

மயிலாடுதுறை அருகே 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி செம்பை ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. தனியார் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க.பொறுப்பாளரும்,பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இதில் சிலம்பம், இரட்டை சிலம்பம், குத்துவரிசை, வாள்வீச்சு, சுருள்வாள், மான்கொம்பு, கட்டைக்கால் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் மயிலாடுதுறையை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளிகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெறும் மாணவர்கள் மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவார்கள். நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் ரவி, கல்வி குழும தாளாளர் நெடுஞ்செழியன், மருத்துவர் வீரபாண்டியன், மற்றும் ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டு சிலம்பாட்டத்தைக் கண்டு ரசித்தனர்.

Tags

Next Story