மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக மிதமான மழை

மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக மிதமான மழை
X

மயிலாடுதுறையில் பெய்த மழை.

மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக மிதமான மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக நான்கு நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து நேற்று மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் கன மழை பெய்தது. இரவு நேரங்கில் மழை இல்லாத நிலையில் இன்று இரண்டாவது நாளாக காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

மாவட்டம் முழுவதும் காலை 11மணி முதல் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம், மங்கைநல்லூர், மணல்மேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இரண்டு நாளாக கன மழையாகவும், லேசான மழையாகவும் தொடர்ந்து பெய்து வருவதால் பயிறு உளுந்து அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

உளுந்து பயிர்கள் மழை நனைந்து வருவதால் மகசூல் குறையும் என்பதால் விவசாயிகளிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!