மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய எம்.எல்.ஏ. நடவடிக்கை

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை  அடைப்பை சரி செய்ய எம்.எல்.ஏ. நடவடிக்கை
X

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்ட இடத்தை சட்டமன்ற உறுப்பினர் நிவதோ முருகன் பார்வையிட்டார்.

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய எம்.எல்.ஏ. நிவேதா முருகன் நடவடிக்கை எடுத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் 16-வது வார்டுக்கு உட்பட்ட மணிக்கூண்டு அருகே உள்ள முக்கிய பிரதான சாலையில் கடந்த சில நாட்களாக பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனால் இப்பகுதி வணிகர்களும் பொதுமக்களும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில், அவ்வழியாக சென்ற தி.மு.க/ மாவட்ட பொறுப்பாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதாமுருகன் பாதாள சாக்கடை அடைப்பை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த பணியை விரைந்து முடிக்கும் படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இப்பணி முடியும் வரை இந்த சாலையில் செல்லும் பேருந்துகளை மாற்றுப் பாதையில் இயக்கவும் அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார். ஆய்வின் போது நகராட்சி தலைவர் செல்வராஜ் மற்றும் நகராட்சி உறுப்பினர்கள், நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா