மயிலாடுதுறை: குடிநீரில் பாதாள சாக்கடை கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை

மயிலாடுதுறை: குடிநீரில் பாதாள சாக்கடை கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை
X

குடிநீரில் பாதாள சாக்கடை கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மயிலாடுதுறையில் குடிநீரில் பாதாள சாக்கடை கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை நகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறையில் கடந்த 15 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் இதை சரிவர பராமரிக்காததால் நகரில் 15 க்கு மேற்பட்ட சாலைகளில், உடைப்பு ஏற்பட்டது சாக்கடை நீர் புகுந்து, சாலைகள் உள்வாங்கியது. இதனால் மயிலாடுதுறையிருந்து சாலை போக்குவரத்தும் உள்ளூர்வாசிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

தற்போது 34, 35, 36, ஆகிய வார்டுகளில் குடிநீரில் பாதாள சாக்கடை தண்ணீர் கலந்து வருவதாக எழுந்த புகாரின்பேரில், மூன்று பகுதிகளையும் இணைக்கும், கன்னாரதெரு பகுதியில் உள்ள பாதாள சாக்கடை தொட்டியில், புதிய 10 குதிரை வாட்ஸ் திறன் கொண்ட மேல் உந்து மின்மோட்டாரை, மயிலாடுதுறை நகரமன்ற தலைவர் செல்வராஜ், மற்றும், நகரமன்ற உறுப்பினர்கள் கார்த்தி, செந்தில் ஆகியோர் முன்முயற்சியால் அமைக்கப்பட்டு பாதாள சாக்கடை குடிநீரோடு கலக்க விடாமல் சீரமைக்கப்பட்டது

Tags

Next Story