பனிமூட்டத்தால் முகப்பு விளக்கு எரிய விட்டு சென்ற வாகன ஓட்டிகள்

பனிமூட்டத்தால்  முகப்பு விளக்கு எரிய விட்டு சென்ற வாகன ஓட்டிகள்
X

மயிலாடுதுறையில், காலை 8, மணிக்கு பிறகும் நிலவிய பனிமூட்டத்தால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு எரியவிட்டுச் சென்றனர். 

மயிலாடுதுறை பகுதியில், மூடுபனியால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டபடியே சென்றனர்.

மயிலாடுதுறை, மங்கநல்லூர், குத்தாலம், மணல்மேடு, செம்பனார்கோவில் போன்ற பகுதிகளில் விடிய விடிய பனி சாரல் மழைபோல் கொட்டி வந்தது. அதிகாலை நேரங்களில், மூடுபனி நிலவியது.

இன்று காலை 8 மணியை தாண்டியும் மூடுபனி இருந்ததால், சாலையில் செல்லும் வாகனஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடியே சென்றனர். கடந்த ஓரு வாரத்திற்கு மேலாக பனி பெய்து வருகிறது. இந்த பனி தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து, பயறுக்கு உகந்ததாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!