தரங்கம்பாடி அருகே சந்திரபாடி கடலில் மாயமான மீனவ இளைஞர் உடல் மீட்பு : போலீசார் விசாரணை

தரங்கம்பாடி அருகே சந்திரபாடி கடலில்  மாயமான மீனவ இளைஞர் உடல் மீட்பு : போலீசார் விசாரணை
X

மயிலாடுதுறையில் காணாமல் போன மீனவ இளைஞர் உடல் மீட்கப்பட்டு விசாரணை நடத்தும் போலீசார். 

மயிலாடுதுறை, சந்திரபாடி கடலில் மாயமான மீனவ இளைஞர் உடல் மீட்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தரங்கம்பாடி அருகே சந்திரபாடி கடலில் மீன் பிடிக்கும்போது மாயமான மீனவ இளைஞர் உடல் மீட்கப்பட்டது. கடலோர காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சந்திரபாடி மீனவர் காலனியை சேர்ந்தவர் வீரகாளி மகன் தீபக்(20). இவர் சக மீனவரான சாமி சுந்தரகுமார் ஆகியோருடன் சேர்ந்து புதன்கிழமை அதிகாலை 3 மணி அளவில் சந்திரபாடியிலிருந்து மத்தி மீன் பிடிக்க கடலுக்கு சென்றதாக கூறப்படுகிறது. ஒரு நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது தீபக்கை காணவில்லை என மற்ற மீனவர்கள் கடலில் தேடியுள்ளனர. மீனவர் மாயமானது குறித்து தரங்கம்பாடி கடலோர காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு கடலில் மீனவரை தேடிவந்தனர்.

இன்று அதிகாலை சந்திர பகுதி மீனவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து தேடுதல் பணியை தீவிரப்படுத்தினர். அப்போது தரங்கம்பாடி அருகே மீனவர் தீபக்கின் உடல் நடு கடலில் மிதந்து வந்ததாக கூறப்படுகிறது. மீனவர்கள் தீபக்கின் உடலை படகில் கரைக்கு எடுத்து வந்தனர். மீனவரின் உடலை பார்த்து கிராமமக்கள் கதறி அழுதனர். தகவலறிந்த தரங்கம்பாடி கடலோர காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொறையார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!