திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்கிய அமைச்சர் மெய்யநாதன்

திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்கிய அமைச்சர் மெய்யநாதன்
X

பிரச்சாரத்தில் பேசும் அமைச்சர் மெய்யனாதன் .

திமுக வேட்பாளருக்கு வாக்களித்தால் முதல்வரின் நலத்திட்டங்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து சேரும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று தனது பிரச்சாரத்தை தொடங்கினார். மயிலாடுதுறை நகராட்சிக்கு உள்பட்ட வார்டுகள் மற்றும் மணல்மேடு பேரூராட்சியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் வாக்கு திரட்டினார். மயிலாடுதுறை நகராட்சி 29-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரஜினியை ஆதரித்து சித்தர்காடு பகுதியில் அமைச்சர் பேசியதாவது:

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியாவே போற்றக்கூடிய நேர்மையான ஆட்சியை தந்து வருகிறார். மயிலாடுதுறை நகராட்சியின் முக்கியமான பிரச்னையாக உள்ள பாதாள சாக்கடைத் திட்டம் மீண்டும் புதிதாக ஏற்படுத்தப்படும். பொறுப்பேற்ற 8 மாதங்களில் மயிலாடுதுறையில் ரூ.116 கோடி மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ரூ.36 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையம் அமைக்க முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மயிலாடுதுறையில் விரைவில் புறவழிச்சாலை அமைக்கப்படும். திமுக வேட்பாளருக்கு வாக்களித்தால் முதல்வரின் நலத்திட்டங்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து சேரும். எதிர்கட்சியினருக்கு வாக்களித்தால் அவர்களது வீடுகளுக்கு சென்று சேர்ந்து விடும் என்றார். அப்போது, திமுக மாவட்ட பொறுப்பாளர் நிவேதாமுருகன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!