சீர்காழியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை அறிமுகம் செய்தார் அமைச்சர் மெய்யநாதன்

சீர்காழியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை   அறிமுகம் செய்தார் அமைச்சர் மெய்யநாதன்
X

சீர்காழியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையோட்டி திமுக மற்றும் தோழமை கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பேசிய  அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் 

ஆட்சியின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைத்து வெற்றிபெறுவதில் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றார் அமைச்சர் மெய்யநாதன்.

சீர்காழியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையோட்டி திமுக மற்றும் தோழமை கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் சுற்றுச்சூழல் காலநிலை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வி. மெய்யநாதன் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது: நடக்க இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி மன்றத் தேர்தலையொட்டி மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் 15 வார்டுகள் மற்றும் சீர்காழி நகராட்சியில் 24, வார்டுகளில் போட்டியிடும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக, மதிமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட சுற்றுச்சூழல் காலநிலை துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சிவி.மெய்யநாதன் சிறப்புரை ஆற்றினார். தேர்தலில் வெற்றிபெற வேண்டிய வியூகம் குறித்தும் தமிழக முதல்வர்,திமுக தலைவர் ஸ்டாலின் குறுகிய கால ஆட்சியின் சாதனைகள் குறித்தும் மக்களுக்கு எடுத்துரைத்து எவ்வாறு வெற்றியை பறிப்பதில் மிகவும் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றார் அமைச்சர் மெய்யநாதன்.

இதில், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகா அலெக்சாண்டர், மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், நகர செயலாளர் சுப்புராயன், ஒன்றிய செயலாளர்கள் பாஸ்கரன், சசிகுமார், ரவிக்குமார், மலர்விழி திருமாவளவன் மற்றும் சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதி, தேவேந்திரன், கொள்ளிடம் ஒன்றிய பெருந்தலைவர் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!