/* */

மயிலாடுதுறை மாவட்டத்தில் தாலிக்கு தங்கம்- அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்

மயிலாடுதுறை மாவட்டத்தில் படித்த பெண்களுக்கு தாலிக்கு தங்கத்தை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

HIGHLIGHTS

மயிலாடுதுறை மாவட்டத்தில் தாலிக்கு தங்கம்- அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்
X

மயிலாடுதுறை மாவட்டத்தில் படித்த ஏழை பெண்களுக்கு அமைச்சர் மெய்யநாதன் தாலிக்கு தங்கம் வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல் ,சோழம்பேட்டை , சீர்காழி ஆகிய பகுதிகளில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் லலிதா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு படித்த பட்டதாரி பயனாளிகளுக்கு நிதி உதவியுடன் கூடிய தாலிக்கு தங்கத்தை வழங்கினார்.

இதில் மாவட்டம் முழுவதும் உள்ள 1660 பயனாளிகளுக்கு 6 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உதவி தொகை மற்றும் தாலிக்கு தங்கம் ஆகியவை வழங்கப்பட்டன. முன்னதாக சிறப்புரையாற்றிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பேசியபோது பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டு செல்வதாகவும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் இருந்து 35 ரூபாய் பிரதமரின் கஜானாவுக்கு செல்வதாகவும் அது மீண்டும் ஏழை எளிய மக்களுக்கு திட்டமாக வரவில்லை என்றும் விமர்சித்தார்.

வளர்ந்து வரும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 36 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் மற்றும் பாதாள சாக்கடை மறுசீரமைப்பு ஆகிய திட்டங்கள் செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Updated On: 5 April 2022 3:52 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?