பூம்புகார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
இந்து சமய அறநிலையதுறை அமைச்சர் சேகர்பாபு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலையூரில் இந்து சமய அறநிலையதுறையின் கீழ் இயங்கும் பூம்புகார் அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. இங்குள்ள பழமை வாய்ந்த கட்டிடங்களை புதுப்பிப்பது மற்றும் நவீன உட்கட்டமைப்புகள் ஏற்படுத்துவது குறித்து அங்கு உள்ள வகுப்பு அறைகளை இந்து சமய அறநிலையதுறை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கல்லூரி பேராசிரியர்கள் தேவை குறித்து கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், இந்து சமய அறநிலையதுறையின் கீழ் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளை ஆய்வு செய்து வருகிறோம். இங்கு படிக்கும் ஏழை எளிய மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கூடுதல் கட்டிடங்கள், நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கபடும். மேலும் காலியாக உள்ள பேராசிரியர்கள் தேர்வு செய்யபட்டு பணியமர்த்தபடுவார்கள் எனவும் உறுதியளித்தார்.
சிதம்பரம் தீட்சிதர்கள் நடவடிக்கை குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை செய்துள்ளோம் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் உரிய நேரத்தில் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கபடும் எனவும் கூறினார்.
இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கண்ணன் உள்ளிட்ட, அறநிலையத்துறை துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu