மனநலம் குன்றிய பெண் கலெக்டர் உத்தரவால் காப்பகத்தில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் மன நலம் பாதிக்கப்பட்ட மகளை மூதாட்டி காப்பகத்தில் ஒப்படைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் கழுக்காணி முட்டம் அருகே பல்லவராயன்பேட்டையை சேர்ந்தவர் மூதாட்டி கல்யாணி (80). இவரது கணவர் நடராஜன் 20 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்ட நிலையில் தனது மனநலம் பாதிக்கப்பட்ட ஒரே மகளான ராணியுடன் (40) வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
கணவரின் மறைவுக்குப் பிறகு இட்லி வியாபாரம் செய்து தனது மகளை காப்பாற்றி வந்த கல்யாணியால் வயது முதிர்வு காரணமாக மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகளை பராமரிக்க முடியவில்லை. இதையடுத்து பல்லவராயன்பேட்டையில் நேற்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் தனது மகளை காப்பகத்தில் சேர்க்க மூதாட்டி வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் துரித நடவடிக்கை காரணமாக இன்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசனின் உத்தரவின் பேரில் சீர்காழி கார்டன் மனநல மறுவாழ்வு மையத்திலிருந்து அதன் இயக்குனர் ஜெயந்தி உதயகுமார் மூதாட்டியின் வீட்டுக்கு வந்து அவரது மகள் ராணியை காப்பகத்துக்கு அழைத்துச் சென்றார்.
நாற்பது ஆண்டுகள் தாயோடு வசித்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ராணி, தாயை பிரிந்து செல்வது கூட தெரியாமல் அனைவருக்கும் டாட்டா காட்டி அப்படியே சென்றது அனைவரையும் கண்கலங்க வைத்தது. மாவட்ட ஆட்சியரின் துரித நடவடிக்கைக்கு மூதாட்டி நன்றி தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu