மயிலாடுதுறை: அம்பேத்கர் சிலைக்கு தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை
மயிலாடுதுறையில் தி.மு.க. சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
டாக்டர் அம்பேத்கர் 131 வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் அமைந்துள்ள அவரது திருஉருவ சிலைக்கு நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து எம்.எல்.ஏ. நிவேதா எம்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தபோது
தமிழக முதல்வர் 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த தினத்தை சமத்துவ தினமாகக் கொண்டாட வேண்டும் என்று அறிவித்துள்ளார். இதனையடுத்து அம்பேத்கரின் பிறந்த தினத்தை அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடி வருகின்றனர். உலகம் கொண்டாடும் தலைவராக விளங்கி வரும் மாமேதை அம்பேத்காரின் பிறந்த தினத்தை சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம். இந்த தருணத்தில் தமிழக முதல்வருக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் எம்.அப்துல்மாலிக், பி.எ. அன்பழகன், நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் மு.ஞானவேலன், மாவட்ட பொருளாளர் ஜி.என்.ரவி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப நுட்ப அணி அமைப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், கீழப்பெரும்பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் தேவி சுரேஷ்குமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு கவுன்சிலர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu