மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் அம்பாள், சுவாமிக்கு நெய் அபிஷேகம்

மயிலாடுதுறை மாயூர நாத சுவாமி கோவில் இன்று சுவாமி பிரகாரத்தில் உலா வந்தார்.
மயிலாடுதுறையில் 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பாடல்பெற்ற மாயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் பொங்கல் திருநாளன்று, மாயூரநாதர் சுவாமி மற்றும் அபயாம்பிகை அம்பாளுக்கு நெய் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா காரணமாக நாளை முதல் ஆலயங்களில் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்பதால் ஒருநாள் முன்னதாக இன்று அதிகாலை நடைபெற்றது.
இதையொட்டி கோயில் நடை அதிகாலை திறக்கப்பட்டு, விரதமிருந்த பக்தர்கள் அளித்த 108 லிட்டர் நெய் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. மேலும், பால், பன்னீர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் அபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்று வழிபாடு நடத்தினர். தொடர்ந்து மஹா தீபாராதனை நடைபெற்று அபிஷேகம் செய்யப்பட்ட நெய் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu